Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடம் நோக்கி நியுசிலாந்து? விண்டீஸை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (11:23 IST)
நியுசிலாந்து அணி வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் நியுசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி நிதானமான தொடக்கத்தை ஆரம்பித்தது. முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்திருந்த்து. கேப்டன் வில்லியம்சன் 97 ரன்களுடனும் டெய்லர் 31 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

அதையடுத்து இன்று களமிறங்கிய நியுசிலாந்து அணியில் மற்ற வீரர்கள் எல்லாம் அவுட் ஆனாலும் மறுமுனையில் நின்று விளையாடிய கேன் வில்லியம்ஸன் இரட்டை சதம் அடித்தார். மேலும் 51 ரன்கள் சேர்த்த வில்லியம்ஸன் 251 (412 பந்து 34 பவுண்டரி 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். நியுசிலாந்து அணி 7 விக்கெட்களுக்கு 519 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து பாலோ ஆன் பெற்ற அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 89 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6-விக்கெட்டுகளை இழந்தது. அதையடுத்து தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் மட்டுமே சேர்த்து 9 விக்கெட்களை இழந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் காயமடைந்ததால் அவரால் பேட் செய்ய முடியவில்லை. இதையடுத்து நியுசிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்த போட்டியையும் நியுசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடனான தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

ஆஸி தொடருக்கு கம்பீர் கேட்ட மூத்த வீரரை தேர்வுக்குழு கொடுக்கவில்லையா?

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments