Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரட்டை சதமடித்து அசத்திய கேன் வில்லியம்ஸன் – நியுசிலாந்து இமாலய ஸ்கோர்!

இரட்டை சதமடித்து அசத்திய கேன் வில்லியம்ஸன் – நியுசிலாந்து இமாலய ஸ்கோர்!
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:16 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கேன் வில்லியம்ஸன் இரட்டை சதம் அடித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் நியுசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி நிதானமான தொடக்கத்தை ஆரம்பித்தது. முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்திருந்த்து. கேப்டன் வில்லியம்சன் 97 ரன்களுடனும் டெய்லர் 31 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

அதையடுத்து இன்று களமிறங்கிய நியுசிலாந்து அணியில் மற்ற வீரர்கள் எல்லாம் அவுட் ஆனாலும் மறுமுனையில் நின்று விளையாடிய கேன் வில்லியம்ஸன் இரட்டை சதம் அடித்தார். மேலும் 51 ரன்கள் சேர்த்த வில்லியம்ஸன் 251 (412 பந்து 34 பவுண்டரி 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். நியுசிலாந்து அணி 7 விக்கெட்களுக்கு 519 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேக்ஸ் அடித்த சூப்பர் சிக்ஸர்... இணையதளத்தில் வைரல்