Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் இறுதிக்கு தகுதி!

டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் இறுதிக்கு தகுதி!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (07:15 IST)
டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் இறுதிக்கு தகுதி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக இந்தியாவில் மீராபாய் சானு அவர்கள் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பதும் பிவி சிந்து பேட்மின்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. சற்றுமுன் நடந்த ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்
 
அவர் முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார் என்பதும், இறுதி சுற்றுக்கு முன்னேறிய வீரர்களில் நீரஜ் சோப்ரா தான் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TNPL Royal kings vs திண்டுக்கல் Dragons மோதல்