Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இப்போது தன்னை நிரூபித்தே ஆகவேண்டும்… இங்கிலாந்து? – நாசர் ஹூசைன் கருத்து!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:25 IST)
இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை வெற்றிக்குப் பின்னர் இப்போது தாய் மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. முதல் இரண்டு போட்டிகளும் சென்னையில் நடக்க உள்ளன. ஆஸி தொடரில் விடுப்பு எடுத்துக்கொண்ட கோலி மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ‘இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ரஹானேவின் தலைமையில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் இப்போது கோலி தனது தலைமையை நிருபித்தே ஆகவேண்டும். அதனால் அவருக்கு அழுத்தம் அதிகமாகியுள்ளது. இது இங்கிலாந்துக்கு பிரச்சனையாக உள்ளது. அதனால் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் இருந்தே சிறப்பாக விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments