ஓ பொம்மலாட்டம் இப்படிதான் இருக்குமா? – இந்திய கிரிக்கெட் வீரர்களை கலாய்த்த மனோஜ் திவாரி!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:37 IST)
விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிவிட்டு வரும் நிலையில் இந்திய வீரர் மனோஜ் திவாரியின் ட்வீட் வைரலாகியுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து கூறிய நிலையில் இந்திய விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்ற ரீதியில் இந்திய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக சச்சின், ரோகித் ஷர்மா, கோலி உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இதுகுறித்து பதிவிட்ட நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “நான் சிறுவனாக இருந்தபோது பொம்மலாட்டத்தை பார்த்ததில்லை. பொம்மலாட்டத்தை காண எனக்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரியாக பதிவிடுவதைதான் அவர் அவ்வாறாக குறிப்பிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments