Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை… முகமது ஷமி உற்சாகம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:13 IST)
இந்த டெஸ்ட்டில் இருந்து தாங்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளது என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்குள் சுருண்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மிக அபாரமாக விளையாடி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஜோ ரூட் மிக அபாரமாக விளையாடி 121 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி இந்த டெஸ்ட்டில் தோல்வியின் விளிம்பில் உள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தாங்கள் மீண்டு வருவதற்கான அவகாசம் உள்ளது எனக் கூறியுள்ளார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் ‘எங்களுக்கு மனதளவில் அழுத்தம் இல்லை. பல போட்டிகளில் 2 அல்லது 3 நாட்களில் முடித்திருக்கிறோம். உங்களுக்கான மோசமான நாள் வரும்போது சந்திக்க வேண்டும். நம்பிக்கையை இழக்கக் கூடாது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில் கூட நாங்கள்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளோம். எதிரணி வலுவான பார்ட்னர்ஷிப்களை அமைக்கும்போது சோர்ந்துவிடக் கூடாது. அதை உடைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்