Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீலேவின் சாதனையை முறியடித்த மெஸ்சி! – மோதி விளையாடும் ஆடு!!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (10:29 IST)
லா லிகா போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி நேற்றைய ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

கால்பந்தாட்ட விளையாட்டில் தற்போதைய போட்டிகளில் ஜாம்பவானாக அறியப்படுபவர் லியோனல் மெஸ்சி. தொடர்ந்து கடந்த 17 ஆண்டுகளாக பார்சிலோனா கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பார்சிலோனா அணி ரசிகர்களின் கனவு நாயகனாக உள்ளார். இவரை ரசிகர்கள் செல்லமாக GOAT என்று அழைப்பது வழக்கம்.. சமீபத்தில் வெலன்சியா அணியுடன் நடந்த போட்டியில் அடித்த கோல் மூலம் பீலேவின் சாதனையை சமன்செய்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற லா லிகா போட்டியில் வெலடொலிட் அணியை எதிர்கொண்ட பார்சிலோனா அணி 0-3 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் பார்சிலோனாவின் சக வீரர்கள் இரண்டு கோல்கள் அடித்திருந்த நிலையில் 65வது நிமிடத்தில் இறங்கிய மெஸ்சி மூன்றாவது கோலை அடித்தார்.

இதற்கு முன்னதாக 643 கோல்கள் அடித்து ஒரே க்ளப்காக விளையாடி அதிக கோல்கள் அடித்த பீலேவின் சாதனையை சமன்செய்த மெஸ்சி நேற்றைய கோல் மூலமாக பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார். உலக அளவில் ஒரே க்ளப்காக அதிகமாக கோல்கள் (644) அடித்த வீரராக மெஸ்சி சாதனை புரிந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments