Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோற்ற வீராங்கனையிடம் கைகுலுக்க மறுத்த மேரி கோம் – கிளம்பியது புது சர்ச்சை !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (09:45 IST)
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இறுதிப்போட்டியில் தன்னிடம் தோற்ற நிகாத் ஜரீன் என்ற வீராங்கனைக்கு கைகுலுக்க மறுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் மேரி கோம்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் அவர் சகவீரர் நிகாத் ஐரீனுடன் மோத இருந்தார். ஆனால் அந்த போட்டியை நடத்தாமலேயே அனுபவம் மிக்க மேரி கோமை ஒலிம்பிக்கு இந்தியாவின் சார்பாக அனுப்புவதாக சொல்லப்பட்டது.

இதனால் ஏமாற்றமடைந்த நிகாத் ஐரீன் ஊடகங்களிடம் முறையிட்டு அந்த போட்டியை நடத்த வைத்தார். ஆனால் போட்டியில் அனுபவம் வாய்ந்த மேரி கோம் வெற்றி பெற்றார். ஆனால் வெற்றிக்குப் பிறகு தன்னிடம் கைகுலுக்க வந்த நிகாத்தோடு கை குலுக்காமல் அவர் சென்றது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமாக பேசிய மேரி கோம் ‘நான் ஏன் அவருடன் கைகுலுக்க வேண்டும்? அவரை ஒருவர் மதிக்க வேண்டும் அவரும் மற்றவரை மதிக்கவேண்டும். களத்தில் வந்துதான் நீங்கள் உங்களை நிரூபிக்க வேண்டும். களத்துக்கு வெளியே அல்ல.’ எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments