Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனு பாக்கருக்கும் - நீரஜ் சோப்ராவுக்கும் திருமணமா.? இணையத்தில் புகைப்படங்கள் வைரல்.!!

Senthil Velan
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (18:42 IST)
பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனுபாக்கர் மற்றும் நீரஜ் சோப்ரா இருவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா நேற்றுடன்  நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்தனர்.  இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த வகையில், இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களைக் கைப்பற்றியது. 

நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் இரண்டு வெண்கல பதக்கங்களை வேட்டையாடியவர் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கர்.  அதேபோல் நடப்பு ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. இவர் கடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வேட்டியாடி இருந்தார். இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் அவர்கள் இருவரும் இணைந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ: செந்தில் பாலாஜி வழக்கு எப்போது நிறைவடையும்.? ED-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி..!!
 
மனுபாக்கரின் தாயார் சுமேதா பாக்கரும் நீரஜ் சோப்ராவும் மற்றொரு காணொளி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், ‘அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களா’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன், அவர்கள் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதுகுறித்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments