Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஸ்மித்தை நெருங்கிய கோஹ்லி – இரட்டைசதத்தால் 37 புள்ளிகள் பெற்று புலிப்பாய்ச்சல் !

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (08:19 IST)
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இரட்டைசதம் அடித்த இந்திய கேப்டன் கோஹ்லி 37 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் ஸ்மித்தை நெருங்கியுள்ளார்.

கடந்த ஒரு வருடகாலமாக ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கோஹ்லி தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார். இந்தாண்டு அவருக்கான தடை நீக்கப்பட்டு ஆஷஸ் தொடரில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி 700க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்ததன் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதமடிக்காத  கோலி 899 புள்ளிகளோடு இரண்டாம் இடத்துக்கு சென்றார். ஸ்மித் 937 புள்ளிகளோடு முதலிடத்தில் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் கோஹ்லி ஒரேப் போட்டியில் 37 புள்ளிகள் பெற்று 936 புள்ளிகளோடு ஸ்மித்தை நெருங்கியுள்ளார். மூன்றாவது போட்டியில் கோலி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் ஸ்மித்தை முந்தி முதலிடம் பிடிப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments