Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்வின் திரும்பி இருப்பது சாதகமான அம்சம்… கோலி நம்பிக்கை!

Advertiesment
அஸ்வின் திரும்பி இருப்பது சாதகமான அம்சம்… கோலி நம்பிக்கை!
, வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:35 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் நான்காண்டுகளுக்குப் பிறகு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமான அஸ்வின், சில ஆண்டுகளாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு டி 20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இதையடுத்து நேற்றைய போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்காக சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். நான்காண்டுகள் இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய அவர் நேற்று சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தி தன் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அஸ்வினின் மீள்வருகை குறித்து பேசியுள்ள இந்திய கேப்டன் கோலி ‘அஸ்வின் திரும்ப அணிக்குள் வந்திருப்பது சாதகமான அம்சம். அவர் கடினமாக பயிற்சி செய்ததின் விளைவாக அணிக்கு திரும்பியுள்ளார். அஸ்வின் விக்கெட் எடுக்கும் ஸ்மார்ட்டான பந்துவீச்சாளர். அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு இன்னும் சிறிது இருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் விளையாடுகிறோம்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே போட்டியில் உச்சத்துக்கு சென்ற ஆஸ்திரேலியா… தென் ஆப்பிரிக்காவுக்கு சிக்கல்!