Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது போட்டியில் மாற்றங்கள் இருக்கும் – கோஹ்லி அறிவிப்பு !

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (13:42 IST)
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் பல மாற்றங்கள் இருக்கும் என அணித் தலைவர் கோலி தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதில் அறிமுக வீரராகக் களமிறங்கிய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி , கலீல் அகமது, குருனாள் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பண்ட் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் சொதப்பியுள்ளனர்.

தொடரை வென்றுள்ள நிலையில் அடுத்த போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் எனவும் காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கோஹ்லி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பண்ட் மற்றும் மனிஷ் பாண்டேவுக்குப் பதில் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. மேலும் ராகுல் சாஹர், தீபக் சாஹர் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments