Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் புதிய இந்தியாவின் பிரதிநிதி – கிரேக் சேப்பலுக்கு கோலி பதில்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (11:18 IST)
அணியின் கேப்டன் விராட் கோலியை கிரேக் சேப்பல் ஆஸ்திரேலியாவில் பிறக்காத ஆஸ்திரேலியன் எனப் புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான அனுகுமுறை, ரன் குவிக்கும் முறை ஆகியவற்றை குறிப்பிட்டு கிரேக் சேப்பல் ஆஸி அல்லாத வீரர்களில் சிறந்த வீரராக நான் கோலியைப் பார்க்கிறேன் எனக் கூறியிருந்தார். இதுகுறித்து இப்போது கோலி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘நான் எப்போதும் என்னை ஆஸ்திரேலியர்களின் மன நிலையோடு பொருத்தி பார்க்கவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் புதிய இந்தியாவின் பிரதிநிதி. என் ஆளுமை என்பது இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் தோள் கொடுக்கத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே இப்படிதான் உள்ளது.

கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா சிறந்த நாடு. இங்கே சிறப்பாக விளையாடினால் மக்கள் உங்களை ரசிப்பார்கள். கடந்த முறை பூம்ரா சிறப்பாக செயல்பட்ட நிலையில் இப்போது அவரது பந்துவீச்சைக் காண ஆவலாக உள்ளனர்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments