Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு இது வேண்டாம்; தோல்வி வருத்தத்தில் கோஹ்லி

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (14:46 IST)
ஐபிஎல் 2018 தொடரில் 201 ரன்கள் குவித்த கோஹ்லிக்கு நேற்று ஆரஞ்ச் கேப் வழங்கப்பட்டது.
 
ஐபிஎல் 2018 தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூர் - மும்பை அணிகள் விளையாடியது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்ற பெங்களூர் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடினார்.
 
இவரது அதிரடி ஆட்டம் மும்பை அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக அமைந்தது. இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்து தோல்வி அடைந்தது. 
 
பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கடைசி வரை தனிநபராக ஆவுட் ஆகாமல் களத்தில் போராடினார். ஆனால் அவருக்கு சரியான கூட்டணி அமையவில்லை. விராட் கோஹ்லி 62 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.
 
இதுவரை கோஹ்லி விளையாடிய 4 போட்டிகளில் 201 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதனால் இவருக்கு நேற்றைய போட்டியின் போது ஆரஞ்ச் கேப் வழங்கப்பட்டது. போட்டிக்கு பின் பேசிய பின் கோஹ்லி கூறியதாவது:-
 
எனக்கு இப்போது இந்த ஆரஞ்ச் கேப் தேவையில்லை. இந்த ஆரஞ்ச் கேப் எனக்கு பெரிய விஷயமில்லை என்று கூறியுள்ளார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் பஞ்சாப் அணிக்கு எதிராக போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கோஹ்லி பெரும் வருத்தத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments