Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பைடர்மேனாக மாறிய கேப்டன் கோஹ்லி

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (16:58 IST)
ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் விராட் கோஹ்லி பிடித்த கேட்ச் ரசிகர்களால் பெரிதும் பாரட்டப்பட்டு வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14 ) பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்தன. போட்டியின் 54 வது ஓவரின் முதல் பந்தை இஷாந்த் வீச அதை எதிர்கொண்ட ஹாண்ட்ஸ்கோம்பின் பேட்டில் பட்ட பந்து ஸ்லிப் திசையில் வேகமாக பறந்தது. முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த கோஹ்லியின் தலைக்கு மேல் சென்ற பந்தை அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக கோஹ்லி அந்தரத்தில் பறந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.

இதனால் ஹாண்ட்ஸ்கோம்ப் அதிர்ச்சியாகி வெளியேறினார். அற்புதமாக கேட்ச் பிடித்த கோஹ்லியைத் தற்போது டிவிட்டரில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கோஹ்லி பிடித்த கேட்சின் வீடியோ டிவிட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.

கோலியைப் போல ரஹானேவும் ஷான் மார்ஷின் கேட்சை ஸ்லிப்பில் அற்புதமாக பிடித்து அசத்தினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான்தான்… ரொனால்டோ தடாலடி!

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அபிஷேக் ஷர்மாவை சீக்கிரமே டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

விரலில் ஏற்பட்ட காயம்.. 5 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் ஓய்வு!

பும்ரா எனும் கொடுங்கனவு தொடர்கிறது… ஆஸி வீரர் பகிர்ந்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments