இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் சற்று முன் தொடங்கியது.
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு மூன்று மாதக் காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டீ 20 தொடர் சமனானதற்குப் பிறகு தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 31 ரன்கள் வித்தொயாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
அதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14 ) பெர்த் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இப்போட்டி மோசமான வானிலைக் காரணமாக 2 மணி நேரம் தாமதாகத் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ள அஸ்வின் மற்றும் ரோஹித்திற்குப் பதிலாக ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புவனேஷ்குமாரைத் தேர்வு செய்யாமல் உமேஷ் யாதவ்வைத் தேர்வு செய்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்குகிறது.
சற்று முன்பு வரை ஆஸ்திரேலியா 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்துள்ளது.