Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைசதம் போட்டு நடையைக் கட்டிய கோலி… நம்பிக்கை இழக்கும் ரசிகர்கள்!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:30 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவுட் ஆனதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் விளிம்பில் உள்ளது இந்தியா.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி 432 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுதாரித்து நிதானமாக விளையாட ஆரம்பித்தது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 211 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. புஜாரா 91 ரன்களுடனும் கோலி 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே புஜாரா 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு பின்னர் சற்று நேரம் நின்று விளையாடிய கோலியும் அரைசதம் அடித்த பின்னர் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்திய அணியின் டிரா வாய்ப்பு மங்கி வருகிறது. அவருக்கு பின்னர் துணைக் கேப்டன் ரஹானேவும் ஆட்டமிழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments