Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் எதிர்காலம் என்ன ? – கங்குலி & கோஹ்லி ஆலோசனை !

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (18:44 IST)
தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேச கங்குலி அழைத்தால் ஆலோசனை செய்ய தயார் என இந்திய கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வொயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய கோலியிடம் தோனியின் எதிர்காலம் என்ன என்பது குறித்துப் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த கோலி ‘கங்குலிக்கு நான் வாழ்த்துக் கூறினேன். ஆனால் தோனி பற்றி அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக என்னிடம் பேசவேண்டும் என சொன்னால் அவர் என்னை அழைப்பார். ’ எனப் பதிலளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கங்குலி வரும் 24 ஆம் தேதி கோஹ்லியை சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார். நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கோஹ்லிக்கு ஓய்வுக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. உலகக்கோப்பைக்குப் பின் எந்த தொடரிலும் விளையாடாத தோனிக்கும் வாய்ப்பு வழங்குவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கோஹ்லி, கங்குலி சந்திப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments