Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணியில் இரு தமிழக வீரர்கள்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணியில் இரு தமிழக வீரர்கள்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (15:11 IST)
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணிக்காக தமிழகத்தை சேர்ந்த நல்லப்பன் மோகன் ராஜ், தனபால் கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


 


மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் காந்திரபுரத்தை சேர்ந்தவர். எஸ்டிஏடி மதுரை மற்றும் சென்னை சாய் சென்டர் மாணவர் விடுதியில் தங்கி பயின்ற அவர் இந்திய கால்பந்து அணிக்காக பல்வேறு வயது பிரிவுகளில் விளையாடி உள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். பின்கள ஆட்டக்காரரான இவர் கடந்த இரு சீசன்களிலும் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இந்த அணி 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால் தற்போது சென்னை அணியில் இணைந்துள்ளார்.

தனபால் சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர். சாய் மையத்தில் மோகன் ராஜுக்கு இவர் ஜூனியர் ஆவார். 25 வயதான தனபால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கினார். நடுகள வீரரான இவர் கடந்த சீசனில் புனே அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரை சென்னையின் எப்சி அணி நிரந்தர வீரர் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments