Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானுக்கு 202 டார்கெட்.. 2 கேட்சுகள் மிஸ் செய்த ஐதராபாத்.. யாருக்கு வெற்றி..!

ஐபிஎல் தொடர்
Siva
வியாழன், 2 மே 2024 (22:06 IST)
ஐபிஎல் தொடரின் 50வது போட்டி இன்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் வழக்கம் போல் அதிரடியாக விளையாடிய 20  ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது

தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 58 ரன்கள், நிதீஷ் குமார் 76 ரன்கள் எடுத்துள்ளனர். இந்த நிலையில் 202 என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் விளையாடி நிலையில் முதல் ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது

பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகிய நிலையில் தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் பராக் விளையாடி வருகின்றனர். இருவருக்குமே தலா ஒரு கேட்ச் கொடுத்த நிலையில் இரண்டையும் ஹைதராபாத் அணி மிஸ் செய்தது. இந்நிலையில் இருவரும் நிலைத்து ஆடுவார்களா தங்களது அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் உடன் சிஎஸ்கே அணியை கீழே தள்ளிவிட்டு 4வது இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி இன்று வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

SRH ஐ 80 ரன்கள் வீழ்த்திய KKR.. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஆச்சு?

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

அடுத்த கட்டுரையில்
Show comments