Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிஸ் ஹெட், நிதீஷ் ரெட்டி அரைசதம்… ஐதராபாத் நிர்ணயித்த வலுவான இலக்கு

vinoth
வியாழன், 2 மே 2024 (21:14 IST)
ஐபிஎல் தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதும் போட்டிகள் நடந்து வருகின்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பேட்செய்ய தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இம்முறை நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

அபிஷேக் ஷர்மா மற்றும் அமோல் ப்ரீத் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். டிராவிஸ் ஹெட் 58 ரன்களில் ஆட்டமிழக்க, நிதீஷ் ரெட்டி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் சேர்த்தார்.

கடைசி நேர அதிரடியில் இறங்கிய கிளாசன் 19 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்களும்,  சந்தீப் ஷர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments