Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 3 வரை ஊரடங்கு எதிரொலி: என்ன ஆகும் ஐபிஎல்?

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (13:40 IST)
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென மார்ச் 24ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஏப்ரல் 15ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது
 
ஆனால் தற்போது மீண்டும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ கூறியபோது, ‘மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை மறந்து விடுங்கள் என்று கூறியிருந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா? என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
ஏனெனில் மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தாலும் சமூக விலகலை ஒரு சில மாதங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பதால் ஐபிஎல் போட்டி உள்பட எந்தவித விளையாட்டு போட்டிகளும் இந்த ஆண்டு முழுவதுமே நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் மழையால் நிறுத்தம்: 4வது விக்கெட்டும் விழுந்தது..!

பிரிஸ்பேன் டெஸ்ட்… மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்..!

7 ஓவர்களில் 3 விக்கெட்.. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்..

சொதப்பும் டாப் ஆர்டர் பேட்டிங்.. மளமளவென விழுந்த 3 விக்கெட்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments