Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

ஒலிம்பிக் வில்விதையில் இந்தியா அசத்தல்.! காலிறுதிக்கு முன்னேறிய மகளிர் அணி..!!

Advertiesment
Indian Womens

Senthil Velan

, வியாழன், 25 ஜூலை 2024 (16:21 IST)
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி  4-வது இடத்தை பிடித்ததை அடுத்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 
பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான ரேங்கிங் சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 
 
இதில் மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற பஜன் கவுர் 11, அங்கிதா பகத் 22 மற்றும் தீபிகா குமாரி 23-வது இடத்தை பிடித்தனர்.


புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி நான்காம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. கொரியா, சீனா மற்றும் மெக்சிக்கோ ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.! முக்கிய வீரர் விலகல்.! இலங்கை அணிக்கு பின்னடைவு..!!