டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

Siva
செவ்வாய், 24 ஜூன் 2025 (07:48 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா முதல் முறையாக ஒரு சாதனை படைத்துள்ளதால், அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 
 
ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் ஜெயஸ்வால், கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்துள்ளனர். 
 
இதன் மூலம், ஒரு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக 5 சதங்களை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதில் குறிப்பாக, ரிஷப் பண்ட் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 465 ரன்கள் இந்திய அணி எடுத்துள்ளது. அதேபோல், முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி, இந்திய அணியை வெல்ல வேண்டும் என்றால், இன்னும் 350 ரன்கள் எடுக்க வேண்டும். 
 
நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 21 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், இன்னும் 350 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா அல்லது இந்தியா அவர்களின் விக்கெட்டுகளை சுருட்டி வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WWE ஜாம்பவான் ஜான் சீனா ஓய்வு: கடைசி போட்டியில் தோல்வி.. ரசிகர்கள் வருத்தம்..

தொடர்ந்து மோசமான பார்மில் சுப்மன் கில்.. மோசமான சாதனை படைத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

மெஸ்ஸியை சந்திக்க தேனிலவை ரத்து செய்த புது மண தம்பதி: 15 வருடங்களாக தீவிர ரசிகை..!

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments