Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புவனேஷ்வர், பும்ரா இல்லாவிட்டாலும் இந்தியா அசத்தும்; முன்னாள் இங்கிலாந்து வீரர்

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (20:06 IST)
புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் இல்லாவிட்டாலும் இந்தியாவிடம் போதுமான வேகப்பந்து வீச்சு பலம் உள்ளது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேரன் காக் தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் 3 போட்டிகான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி என்ன செய்ய போகிறது என்ற ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேரன் காக் இந்திய அணி வேகப்ந்து வீச்சில் பலமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
புவனேஸ்வர் மிகப்பெரிய இழப்புதான். இந்தியா தற்போதைய நிலையில் ஒரு வீரரை சார்ந்திருக்கவில்லை. இன்றைய நிலையில் சொந்த மைதானத்திலோ அல்லது வெளி நாட்டிலோ விளையாடியால் இந்தியாவை தோற்கடிக்க வேண்டுமென்றால், உங்களுடைய தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 
 
புவி ஸ்விங் செய்வார். பும்ரா ஸ்கிட்டிங் சீம் பவுலர், உமேஷ் யாதவ் புதுப்பந்தில் அதிக வேகத்துடன் வீசுவார். முகமது ஷமி ஸ்டிராங்க் மற்றும் ஹிட்ஸ். இசாந்த் ஷர்மா அனுபவம் வாய்ந்தவர். ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். அத்துடன் அதிக ஓவர்கள் வீசுவார்.
 
அதேபோல் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அசத்தக்கூடியவர்கள். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது இந்திய நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கும். குறிப்பாக சுழற்பந்து வீச்சில் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments