Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று நான்காவது ஒருநாள் போட்டி –என்ன செய்யப்போகிறது விராட் & கோ?

இன்று நான்காவது ஒருநாள் போட்டி –என்ன செய்யப்போகிறது விராட் & கோ?
, திங்கள், 29 அக்டோபர் 2018 (10:00 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் என மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் எளிதாக வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

அதேப்போல ஒருநாள் போட்டிகளிலும் எளிதாக வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் வெஸ்ட் இண்டீஸ் விஸ்வரூபம் எடுத்து விளையாடிவருகிறது. முதல் போட்டியில் இந்தியா கோஹ்லி மற்றும் ரோஹித்தின் அதிடடி சதத்தால் எளிதாக வென்றது. இர்ணடாவது போட்டில் இந்தியா நிர்ணயித்த 322 என்ற இலக்கை துரத்திய மேற்கு இந்திய தீவுகள் முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் ஷேய் ஹோப் மற்றும் ஹெட்மைரின் சிறப்பான ஆட்டத்தால் போட்டியை சமனில் முடித்தது. இந்தியாவின் மோசமான பௌலிங்க் இந்த போட்டி சமனில் முடிய முக்கியக் காரணமாக அமைந்தது.

மூன்றாவது போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஹோப் மற்றும் நர்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 281 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து 282 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்தியாவில் விராட் கோஹ்லியைத் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 240 ரன்களுக்கு ஆட்டமிழந்து 41 ரன்களில் தோல்வியடைந்தது.
வலுவான பேட்டிங் வரிசையை இந்தியா கொண்டிருந்தாலும் மூன்று போட்டிகளிலும் கோஹ்லி மற்றும் ரோஹித்தை தவிர இன்னும் யாரும் பெரிய ஸ்கோர்களை எட்டவில்லை. அம்பாத்தி ராயுடு ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் தோனி, தவான், ரிஷாப் பாண்ட் போன்றோர் ஏமாற்றி வருகின்றன. புவனேஷ்குமார் மற்றும் பூம்ராவின் வருகை பந்துவீச்சுக்குப் பலம் சேர்த்துள்ளது.

விராட் கோஹ்லி அனாயசமான பார்மில் இருக்கிறார். நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் சதம் அடித்து ஹாட்ரிக் சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். ஒட்டுமொத்தமாக 11 வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது கிரிக்கெட்டின் எழுதப்படாத விதி. அது கோஹ்லி மற்றும் இந்திய அணிக்கும் பொருந்தும். அடுத்து வரும் இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரைக் கைப்பற்ற முடியும் என்பதால் இப்போட்டில் வெற்றிப்பபெற முழுமூச்சுடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தல இல்லாம ஒரு ஆணியும் புடுங்க முடியாது: விக்னேஷ் சிவன் ஆவேசம்