Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை காலி செய்யுமா இந்திய அணி?

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (14:41 IST)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3வது ஒரு நாள் போட்டி நாளை புனேவில் நடைபெற இருக்கிறது.
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வியுற்றது.
 
இதையடுத்து இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டி கடந்த 21ந் தேதி கவுகாத்தியில் தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து முன்னிலை வகித்தது. அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டையில் முடிந்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்து புதிய சாதனையை படைத்தார்.

 
 
இந்நிலையில் 3-வது ஒரு நாள் போட்டி நாளை புனேவில் நடக்கிறது. இந்திய அணி பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் ஃபுல் ஃபார்மில் இருக்கின்றனர். இருந்தபோதிலும் கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய அணிக்கு ஆட்டம் காண்பித்துவிட்டனர்.

நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments