Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் ஜப்பான் அணி

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (11:12 IST)
ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்திய அணி ஜப்பான் அணியுடன் மோத இருக்கிறது.

 
 
மஸ்கட்டில் ஆசியக் கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான், ஓமன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றிருக்கின்றன. இதுவரை விளையாடிய ஆட்டங்களில் இந்திய அணி 5 மேட்சில் வெற்றிபெற்றுள்ளது. 
 
அரையிறுதியில் இந்திய அணி யாருடன் மோத போகிறார்கள் என்ற குழப்பம் இருந்தது. இதனிடையே நேற்று ஜப்பான் அணி ஓமனை எதிர்கொண்டு 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை பெற்றுள்ளது.
 
இரண்டு அணிகளுமே வலுவான அணி என்பதால் நாளை நடைபெற உள்ள இந்த அரையிறுதி ஆட்டத்தில் யார் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ அணிக் கேப்டனாக ரிஷப் பண்ட்டை அறிவித்தார் சஞ்சய் கோயங்கா!

கோலி தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்… அஸ்வின் சொல்லும் காரணம்!

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இடம்பெறாததால் சிராஜ் எடுத்த அதிரடி முடிவு!

கில் என்ன எனக்கு மாமனா? மச்சானா?.. ரசிகரின் கேள்விக்கு சிம்பிளாக பதில் சொன்ன அஸ்வின்!

ஷகீப் அல் ஹசனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments