Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெதர்லாந்துக்கு எதிரான போட்டி.. ரோஹித், சுப்மன் கில் இருவரும் அரை சதம்..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (15:32 IST)
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில்  டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருமே அரை சதம் அடித்து அவுட் ஆகி உள்ள நிலையில் தற்போது விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகின்றனர்.  சற்றுமுன் வரை இந்திய அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தியா அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது என்பதும் நெதர்லாந்து  தொடரிலிருந்து வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த போட்டி முக்கியத்தும் இல்லாத போட்டியாக காணப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டி  வரும்  15ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும். இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும். உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments