Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (19:32 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி உட்பட ஒரு சில நகரங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதை அடுத்தே இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனை அடுத்து இந்திய மகளிர் அணியினர் ஆஸ்திரேலியா செல்ல இருந்தது ரத்து செய்யப்பட்டது 
 
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது 
 
ஆனால் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இந்தியா ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி 2022ஆம் ஆண்டு நடைபெறும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments