Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஸ்க் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி: என்ன ஆகும் கான்பூர் டெஸ்ட்!

Advertiesment
ரிஸ்க் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி: என்ன ஆகும் கான்பூர் டெஸ்ட்!
, திங்கள், 29 நவம்பர் 2021 (07:27 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரிஸ்க் எடுத்து டிக்ளேர் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கான்பூர் டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்த நிலையில் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவடைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி மேலும் 280 ரன்கள் அடித்து வெற்றி பெறுமா இந்திய அணி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவாஸ்கருக்கு பின்னர் முக்கிய சாதனை செய்த ஸ்ரேயாஸ் அய்யர்!