இந்திய அணி இரண்டாம் நாளின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது.
நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச தீர்மானம் செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே அபாரமாக விளையாடினர். ரோகித் சர்மா 83 ரன்களில் அவுட்டான போதிலும் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் விளாசினார். இந்நிலையில் ராகுலின் சதம் குறித்து ரோகித் சர்மா பெருமிதம் கொண்டுள்ளார். ஆட்ட முடிவில் இந்திய அணி 276 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்திருந்தது.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் முதல் இரண்டு ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது. ராகுல் மற்றும் ரஹானே இருவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். தற்போது இந்திய அணி 283 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது.