Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்கள்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (09:48 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது 
 
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து. இதனால் அந்த அணி ஃபாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது 
 
நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த தென்னாப்பிரிக்கா அணி, இன்று மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய ஆட்டட்தில் தென்னாபிரிக்க அணி ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் அடுத்தடுத்த 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்களை இந்திய பந்துவீச்சாளர் நதீம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி  பெற்று 3-0 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட இந்திய வீரர்கள் அனைவருக்கும் இந்த வெற்றி பெருமைக்குரியதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

வர்ணனையாளர்களுக்கு அறிவே இல்லை: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆவேசம்..!

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!

ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை தலைகுணிய வைத்துவிட்டார்… அஸ்வின் கோபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments