Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைக்கு ஆல் அவுட்தான்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா!

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (18:20 IST)
தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் மேட்சில் இந்தியாவை வெற்றி கொள்ள முடியாமல் திணறி வருகிறது தென் ஆப்பிரிக்கா.

தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்டுகளில் வென்றுள்ள இந்தியா, இந்த டெஸ்ட்டிலும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்ததாக விளையாட தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 162 ரன்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா ஃபாலோ ஆன் கேட்க இந்தியாவும் ஒப்புக்கொண்டதால் இன்று இரண்டாவது கட்ட ஆட்டம் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தியாவை விட 203 ரன்கள் குறைவாக இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகளே மிச்சம் உள்ளன.

நாளை காலை தொடரும் ஆட்டத்தில் மீத இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நாளைக்கு ஆல் அவுட்தான் என மிகுந்த நம்பிக்கையோடு கூறி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

பெங்களூர் அணியினரைக் கட்டியணைத்து நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி… எதற்குத் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments