Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. இங்கிலாந்தின் 4வது தொடர் தோல்வி..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (21:25 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்து 229 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 230 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தது. ஷமி, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் அபாரமாக பந்து வீசினார். குறிப்பாக ஷமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்

இதையடுத்து இங்கிலாந்து அணி  129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு இது தொடர்ச்சியாக ஆறாவது வெற்றி என்பதும் தற்போது 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை மீண்டும் பிடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு தொடர்ச்சியாக இது நான்காவது தோல்வியாகும். ஏற்கனவே பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக நான்கு தோல்வி அடைந்த நிலையில் இங்கிலாந்து அதை சமன்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments