Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த மாதம் இதே நாளில் இந்திய அணியின் நிலை என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:41 IST)
இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
பிரதமர் மோடி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ தலைவர் கங்குலி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்பட பலர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அதுமட்டுமின்றி இந்திய அணிக்கு போனசாக ரூபாய் 5 கோடி அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த மாதம் இதே நாளில் அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தான் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது என்பதும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய சோதனையை சந்திக்கப் போகிறது என்றும் கூறப்பட்டது 
 
ஆனால் ஒரே மாதத்தில் இந்தியா மிகவும் பிரமாண்டமாக எழுச்சி அடைந்துள்ளது. ஜனவரி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அதாவது 36 ரன்களில் ஆல் அவுட் ஆனதற்கு பின் ஒரே மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று வரலாற்று சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தகவலை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

'டே பாதர் என்னடா இதெல்லாம்'… தந்தையை ஜாலியாகக் கலாய்த்த அஸ்வின்!

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments