Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத்துக்கு இன்று கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
சனி, 13 மே 2023 (15:06 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த சுற்று செல்ல ஹைதராபாத் அணிக்கு கடைசி வாய்ப்பாக இன்றைய போட்டியில் அந்த அணி வெல்ல வேண்டும். அதுமட்டுமின்றி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்,
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் மார்க்கம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஹைதராபாத் அணியினர் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஹைதராபாத் அணியை பொருத்தவரை 8 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் லக்னோ அணி தற்போது 11 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி ஓரிடம் முன்னேறும் என்றும் அடுத்த  சுற்று செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments