Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கு தோனி வேணும்னா விளையாட விடுங்க! – ஒரே போடாக போட்ட ஹர்பஜன்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (09:15 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி மீண்டும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெறுவாரா என்பது குறித்து ஹர்பஜன்சிங் பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் விளையாடிய மகேந்திரசிங் தோனி, அதற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக எந்த டெஸ்ட் போட்டிகளிலும் கூட பங்கேற்கவில்லை. தற்போது நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாட இருந்த நிலையில் கொரோனா பிரச்சினைகளால் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் “தோனி மிக சிறந்த வீரர். அவரால் முடியுமா? முடியாதா? என்பது குறித்து விவாதிக்க அவசியம் இல்லை. உங்களுக்கு தோனி அவசியம் என்ற எண்ணம் உள்ள பட்சத்தில், அவரும் சம்மதித்தால் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரையும் தேர்வு செய்யலாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments