Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்: இந்திய அணிக்கு ஹர்பஜன்சிங் அறிவுரை

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (07:04 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவெ இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் இந்திய அணியை குறிப்பாக கேப்டன் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு ஆறுதல் தரும் வகையில்  தோல்வியால் துவண்டு விடாமல் நேர்மறையான எண்ணத்துடன் கடைசி டெஸ்டை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

ஒரு அணியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது ஒரு கேப்டனின் உரிமை என்றும், விராத் கோஹ்லி காரணம் இல்லாமல் யாரையும் நீக்க மாட்டார் என்றும் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். மேலும் 3வது டெஸ்டி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-2 என்ற கணக்கில் முடிக்கும் என்று நம்புவதாகவும் ஹர்பஜன்சிங் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments