Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? : ஒலிம்பிக் மைதானத்தில் ஓரினச்சேர்க்கையாளர் வேண்டுகோள்

Advertiesment
என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? : ஒலிம்பிக் மைதானத்தில் ஓரினச்சேர்க்கையாளர் வேண்டுகோள்
, புதன், 10 ஆகஸ்ட் 2016 (14:12 IST)
தற்போது நடந்து வரும் ரியோ ஒலிம்பிக்கில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


 

 
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் கலகலப்பான சம்பவங்களும் நடக்கும். ஒரு பெண் ஓரினச் சேர்க்கையாளர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மற்றொரு பெண்ணிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது.
 
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மகளிர் ரக்பி அணியின் வீராங்கணை இசடோரா செருல்லாவும், மர்ஜோரி இனியாவை என்ற பெண்ணும் இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
 
நேற்று ரக்பி இறுதிப்போட்டியில் பிரேசில் மகளிர் அணி விளையாடியது. அந்த போட்டி முடிந்த பின், இனியா, தனது இசடோராவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆயிரக்கணக்கான பேரின் முன்னிலையில் புரபோஸ் செய்தார்.

webdunia

 

 
கையில் மைக்கோடு, இசடோராவை நெருங்கிய இனியா, அவர் முன் மண்டியிட்டு  “என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்று கேட்டார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர். அதன்பின் பேசிய இனியா “இசடோராதான் என் வாழ்க்கை.. என் அன்பு, என் வாழ்க்கை. அவள்தான் எனக்கு எல்லாமே” என்று உருகியபடி கூறினார்.
 
ஒலிம்பிக் மைதானத்தில், ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் இப்படி நடந்து கொண்டது இதுதான் முதல்முறை. அவரை ஏற்றுக் கொண்ட இசடோரா அவரை கட்டி அணைத்து முத்தமிட்டு தனது சம்மதத்தை தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கங்களுடன் செல்ஃபி: ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்