Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவில் அசத்திய சிராஜ் நாளைய போட்டியில் இடம்பெறுவாரா? காம்பீர் பதில்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (13:04 IST)
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது அதில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவர் சிராஜ் என்பதும் அவர் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அசத்தலாக ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் தெரிந்ததே 
 
இதனை அடுத்து அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளிலும் சிராஜ் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை தொடங்க இருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது 
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அவர்கள் ’சென்னையில் நாளை தொடங்கும் இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு சிராஜ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேலும் அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார் என்றும் காம்பீர் பெருமிதமாகக் கூறினார். எனவே நாளைய போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments