Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்!

நடிகை அனுஷ்காவிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்!
, வெள்ளி, 1 நவம்பர் 2019 (09:10 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் ஒருவர் தேநீர் கொடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் என்பவர் கூறியிருந்த நிலையில் அனுஷ்காவின் எதிர்ப்பை அடுத்து அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
கடந்த சில மாதங்களுக்கு இங்கிலாந்து நாட்டில் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது, இந்திய அணி கேப்டன் விராத் கோலி மனைவியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு அணி தேர்வாளர்களில் ஒருவர் தேநீர் கொடுத்து உபசரித்ததாகவும், தேநீர் கொடுப்பதுதான் தேர்வாளரின் வேலையா? என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் என்ஜினீயர் கூறியிருந்தார். தேர்வுக் குழுவினரை சாடுவதற்காக அவர் இதனை கூறியிருந்தாலும் அனுஷ்கா இதனால் கடும் கோபம் கொண்டு இந்தக் குற்றச்சாட்டை மறுத்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
 
அந்த அறிக்கையில், ‘தனக்குத் தேர்வாளர்கள் யாரும் தேநீர் வழங்கவில்லை என்றும் உலகக் கோப்பைத் தொடரில், எந்த போட்டியையும் தான் தேர்வாளர்கள் அறையில் இருந்து பார்க்கவில்லை என்றும் தேவையில்லாமல் எனது பெயரை இழுக்க வேண்டாம் என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
 
அனுஷ்காவின் காட்டமான அறிக்கைக்கு பின் பரூக் என்ஜினீயர், மன்னிப்புக் கேட்டுள்ளார். அவர் கூறும்போது, இந்தச் சம்பவத்தில் அனுஷ்கா சர்மாவை நான் ஏதும் சொல்லவில்லை. அவர் சிறந்த பெண்மணி. நான் நகைச்சுவைக்காக சொன்ன விஷயம் பெரிதாக ஊதப்படுகிறது. தேர்வாளர்கள் மீதுதான், என் கோபமே தவிர, அனுஷ்கா மீது இல்லை. நான் கூறிய கருத்தால் அனுஷ்கா மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.எஸ்.ஐ கால்பந்து: சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!