Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி தொடக்க வீரர்கள் ஏமாற்றம் – வெற்றி முனைப்பில் இங்கிலாந்து !

Webdunia
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (17:51 IST)
ஆஷஸ் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட தொடக்கத்தில் ஆஸி அணி தொடக்க வீரர்கள் சொதப்பி வருகின்றனர்.

ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. அதனால் கடைசிப் போட்டியில் எப்படியும் வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.

கடந்த 13 ஆம் தேதி கடைசிப் போட்டித் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் ஜோ ரூட்டின் அரைசதத்தால் 294 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அதன் பின் தங்கள் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸியில் ஸ்டீவ் ஸ்மித்தைத் தவிர அனைவரும் ஏமாற்ற அந்த அணி 225 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களி சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அபாரமாக வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் 69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ டென்லி மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரின் சிறப்பான அரைசதத்தால் இங்கொலாந்து அணி 313 ரன்களை சேர்த்து 8 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 381 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதைத் தொடர்ந்து நான்காம் நாளைத் தொடங்கிய இங்கிலாந்து மேலும் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதனால் ஆஸிக்கு 391 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணியில் வழக்கம்போல ஹாரிஸ் 9 ரன்களும், வார்னர் 11 ரன்களும் லபுஷ்கேன் 14 ரன்களும் எடுத்து அவுட் ஆக அடுத்து ஆடவந்த ஸ்மித் 18 ரன்களோடும் மேத்யு வேட் 10 ரன்களோடும் களத்தில் உள்ளனர். ஆஸி அணி 68 ரன்களை சேர்த்து 3 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments