Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை: டிராவிட் அதிரடி!!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:38 IST)
தோனி விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை அவரது முடிவுகளை அவரே தீர்மானிப்பார் என முன்னாள் இந்திய அணி கேப்டன் டிராவிட் தெரிவித்துள்ளார்.


 
 
இந்திய அணியின் வெற்றி கேப்டன் என அழைக்கப்படும் தோனியின் மீது தற்போது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தோனி கூலாகவே காணப்படுகிறார்.
 
முன்னர் தன் மீது எழுந்த விமர்சனங்கள் காரணமாகவே தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். தனது கேப்டன் பதவியையும் துறந்தார். தற்போது கோலி தலைமையில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது.
 
இருப்பினும் தோனி விஷயத்தில் அணிக்குள் அரசியல் நடப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன. தற்போது, 2019 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்பாரா? அவர் தனது ஓய்வை எப்போது அறிவிப்பார் என விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. 
 
இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் டிராவிட் இது குறித்து கடுத்து தெரிவித்துள்ளார். டிராவிட் கூறியதாவது, தோனி குறித்து பலருக்கு பல கருத்துகள் உள்ளது. ஆனால் என்னை பொறுத்த வரையில் தேர்வுக்குழுவினர் அவரை தேர்வு செய்யும் வரை அவர் இந்திய அணிக்காக விளையாடும் தகுதி உள்ளவர்.
 
ஆனால் ஓய்வு குறித்த முடிவை எடுக்கும் தகுதி தோனி ஒருவருக்கு மட்டுமே உள்ளது. அவரை ஓய்வு பெற யாரும் கட்டாயப்படுத்த முடியாது. வேறு யாருக்கும் இது குறித்து விமர்சிக்க தகுதி இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments