Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்கட் முறை தவறானது அல்ல…. அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வீரர்!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (17:38 IST)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் அஸ்வினுக்கு ஆதரவாக மன்கட் முறையில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 12 ஆவது ஐபிஎல் போட்டிகளின் 4 ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு மிக முக்கியமானக் காரணங்களில் ஒன்றாக ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதையடுத்து அஸ்வின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ‘நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் உள்ள விதிமுறைகளின்படிதான் செயல்பட்டேன், 'மன்கட் 'அவுட் செய்தேன். பேட்ஸ்மேன்கள்தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான உரிமைகளின் அடிப்படையில்தான் பட்லரை நான் ஆட்டமிழக்கச் செய்தேன். இதில் எந்தவிதமான வாக்குவாதத்துக்கும் இடமில்லை. இதில் கிரிக்கெட் ஸ்பிரிட் கொல்லப்பட்டது எப்படி எனக்குத் தெரியவில்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது தினேஷ் கார்த்திக் இப்போது அஸ்வினுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில் ’மன்கட் என்ற வார்த்தையை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் சிறந்த பேட்ஸ்மேனான வினு மன்கட்டை நாம் அவமதிக்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments