Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் லியோனி போஸ்டரை கிழித்த திமுகவினர்: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (16:21 IST)
lioni poster
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக சமீபத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் மற்றும் நடிகர் திண்டுக்கல் ஐ லியோனி நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இதனையடுத்து அவருக்கு அவரது ஆதரவாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் திண்டுக்கல் ஐ லியோனி ஆதரவாளர்கள் திண்டுக்கல் பகுதியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டினர். இந்த போஸ்டரில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர்களின் படங்களோடு, பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் உதயநிதி படமும் உள்ளது 
 
ஆனால் திண்டுக்கல் பகுதியில் பிரபலமாக இருக்கும் திமுக பிரபலமான பெரியசாமி படம் இல்லை இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி ஆதரவாளர்கள் திண்டுக்கல் லியோனியின் போஸ்டரை கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்புச் செயலாளரின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரை திமுகவினர்களே கிழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments