Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே வீரர் செய்த செயலால் சிக்கிய ஐபிஎல் அணிகள்! – பிசிசிஐ கடும் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:53 IST)
அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து அனுமதியின்றி வெளியேறினால் அணிக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது.

அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் வீரர்கள் பயோ பபுள் என்னும் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட அந்த பகுதியை தாண்டி வெளியே செல்வதோ, வெளியாட்களுடன் பழகுவதோ தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சிஎஸ்கே வீரர் கே.எம்.ஆசிப் விதிமுறைகளை மீறி வெளியே சென்றதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து சிஎஸ்கே உள்ளிட்ட அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட அணியின் வீரர் விதிமுறையை மீறி வெளியே சென்றால் அணிக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் மற்றும் சம்பந்தப்பட்ட வீரர் ஆறுநாள் தனிமைப்படுத்தப்படுவதுடன், அடுத்த போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை விதிகளை மீறினால் அணியின் வெற்றி பாயிண்ட்களில் இருந்து 1 புள்ளியும், மூன்றாவது முறை மீறினால் 2 புள்ளிகளும் திரும்ப பெறப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments