Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துஷார் மேல நம்பிக்கை இருக்கு.. நீங்களே பாப்பீங்க! – தோனி நம்பிக்கை!

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (14:31 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில் துஷார் தேஷ்பாண்டே திறமை குறித்து கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே அனல் பறக்கும் போட்டி நடந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக இரண்டு ஆட்டங்களில் சென்னை அணியின் பந்துவீச்சு மோசமானதாக இருந்தது. சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே நிறைய வைடுகள், நோ பால் வீசியது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய துஷார் தேஷ்பாண்டே ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார். துஷார் தேஷ்பாண்டே குறித்து பேசியுள்ள கேப்டன் தோனி “துஷார் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரிடம் தொடர்ச்சியாக பேசி வருகிறோம். அறிவுரைகளை கவனமாக கேட்டு சிறப்பாக செயல்படுகிறார். முதல் 2 போட்டிகளில் நோ பால்கள் வீசியிருந்தார். ஆனால் தற்போது நன்றாக முன்னேறி வருகிறார். எதிர்வரும் போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

இந்தியாவின் அதிரடியில் ஆட்டம் கண்ட நியூசி! 252 டார்கெட்! - சாதிக்குமா இந்தியா!

இந்திய சுழலில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்.. பைனலில் அசத்தும் இந்திய அணி..!

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments