Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிய இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த ஐதராபாத்.. டெல்லிக்கு 2வது வெற்றி..!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (07:47 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 145 என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் ஐதராபாத் அணி தோல்வி அடைந்துள்ளது என்பதும் அந்த அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் தலா 34 ரன்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து 145 என்ற எளிய இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார மயங்க் அகர்வால் அருமையாக ஆடியதால் கண்டிப்பாக ஹைதராபாத் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததாலும், டெல்லி அணியினர் அபாரமாக பந்து வீசியதாலும், ஹைதராபாத் அணி 20 அவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனை அடுத்து டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஹைதராபாத் அணிக்கு இந்த தோல்வியால் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வி கிடைத்துள்ளது என்பதும் டெல்லிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் புள்ளி பட்டியலில் இரு அணிகளுமே கடைசி இரண்டு இடத்தில்தான் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments