Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியில் ஏமாற்றிய வீரர்கள்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (07:31 IST)
சிஎஸ்கே-ஆர்ஆர் போட்டியில் ஏமாற்றிய வீரர்கள்!
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய விளையாட்டில் இரு தரப்பிலும் ஒரு சில வீரர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் ரசிகர்களை ஏமாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவர் ஒரு பந்தை எதிர் நோக்காமல் அவுட்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
அதேபோல் ராபின் உத்தப்பா நன்றாக அடித்து ஆடுவார் என்று நினைத்த நிலையில் 5 ரன்களில் அவுட் ஆனதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கொரோனாவில் இருந்து மீண்டு முதல் போட்டியில் நன்றாக விளையாடிய அம்பத்தி ராயுடுவுக்கு பதில் களமிறக்கப்பட்டவர் கெய்க்வார்ட். ஆனால் இவர் முதல் பந்திலேயே இறங்கி அடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து ஸ்டெம்பிங் முறையில் அவுட்டானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐபிஎல் போட்டியில் முதல் போட்டியில் விளையாடும் கெய்க்வாட் முதல் பந்திலேயே அவுட்டானது அவருக்கும் அணிக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது என்பது குறிப்பிடதக்கது 
 
அதேபோல் வாட்சன் எதிர்பாராதவிதமாக போல்டானார். பந்து அவருடைய பேடில் பட்டு ஸ்டெம்பில் பட்டதால் அவரது விக்கெட் பறிபோனது. மேலும் பெங்களூர் அணிக்கு எதிராக 6 பந்துகளில் 18 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை நெருக்கிக் கொடுத்த சாம் கர்ரன், இந்தப் போட்டியிலும் 6 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி இருந்தாலும் அவர் இன்னும் கொஞ்சம் நிலைத்து ஆடி இருந்தால் சென்னை அணி வெற்றி பெற்று இருக்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments